Monday, 11 July 2011

இயல்பை மறந்து இயந்திரத்தனத்தால் இழந்தது எத்தனை???

Interesting Poetry... And believe it is true......


இயல்பை மறந்து இயந்திரத்தனத்தால் இழந்தது எத்தனை???by Lakshmanan Ganesan on Saturday, July 9, 2011 at 10:15pm


இயல்பை மறந்து இயந்திரத்தனத்தால் இழந்தது எத்தனை???

சிரிக்க மறந்தோம்; சிறப்பை மறந்தோம்; மனிதன் என்பதை முழுக்க மறந்தோம்.

காலையில் எழுந்ததும் காப்பி தொடங்கி, இரவு வரும் வரை இயந்திரமயமாய்

காசும் பணமும், கவலையும் சோர்வும் வாட்டிவதைப்பதை வாழ்க்கை ஆக்கி,

முழுதாய் மூச்சு வாங்க முற்றிலும் மறந்தோம்.

மழலை முகத்தில் மலரும் சிரிப்பை ரசிக்க மறந்தோம்.

தென்றல் வந்து தீண்டும் போது உணரும் சுகத்தை உறுதியாய் மறந்தோம்

இயந்திரத்தன்மை ஏற்றது போதும்...மனிதம் ஏற்று மகிழ்வை ஏற்று

இழந்த தருணங்கள் மீட்க பார்போம் ..சிரித்து மகிழ்வோம் தினம் தினம் வாழ்வோம் ...

இரவு வணக்கங்களுடன் ...லேனா கணேஷ் ....



சிரித்து மகிழ்வோம்